முதல்வர் ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது… 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

தூத்துக்குடி ;
தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ்(30). இவர் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் ஒற்றை அளித்தார்.
அதில், எனது முகநூல் பக்கத்தை பார்த்தபோது செல்வ பாலா என்பவரது பதிவை பார்த்தேன்.
அதில், காவல் நிலைய அறையில் டேபிளின் பின்புறம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை உடையில் நின்று கொண்டிருப்பது போலவும், அவருக்கு முன்னால் தற்போதைய தமிழக முதல்வர் முக. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ், செந்தில் பாலாஜி, பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக கைகட்டி நிற்கும்படியான புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
மேலும் அதற்கு கமெண்டில் அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம் மொத்த திராவிடியான்கள் கதறல் என்று பதிவிட்டுள்ளார். இந்த அவதூறுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே புகைப்படத்தை பதிவேற்றம் செய்த மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவதூறாக பதிவிட்ட தூத்துக்குடி பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த செல்வ பாலனை(29) போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.