கொடைக்கானல் சின்ன மாரியம்மன் கோவில் விழா !! வண்ண வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொடைக்கானல் சின்ன மாரியம்மன் கோவில் விழா !! வண்ண வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் சின்ன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உற்சவ விழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு மின் அலங்கார தேரில் அம்மன் உலா வந்தார்.

விழாவில் நேற்று மேள வாத்தியங்கள் முழங்க 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி, பறவை காவடி எடுத்து மற்றும் பல்வேறு வேடங்கள் அணிந்தும் ஊர்வலமாக வந்தனர்.

இந்த ஊர்வலம் டிப்போ காளியம்மன் கோவிலில் தொடங்கி ஏரிச்சாலை, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது.

இதனை தொடர்ந்து வண்ண வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரத்தில் சின்ன மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இரவு வாணவேடிக்கையும், அன்னதானமும் நடைபெற்றது.

இதில் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply