‘ஆதிபுருஷ்’ இன்று திரையரங்குகளில் ….

‘ஆதிபுருஷ்’ இன்று திரையரங்குகளில் ….

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்று (ஜுன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தின் காட்சியின்போது திடீரென திரையரங்கிற்குள் குரங்கு நுழைந்ததாக தெரிகிறது. குரங்கை கண்ட ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் பாடலை பாடி ஆரவாரம் செய்துள்ளனர்.

Leave a Reply