”பாபா பிளாக் ஷீப்” டிரைலர் வெளியீட்டு விழா !!

”பாபா பிளாக் ஷீப்” டிரைலர் வெளியீட்டு விழா !!

அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக் ஷீப்”.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றிகிறார் விருமாண்டி படத்தின் மிகவும் பிரபலமடைந்த நடிகை அபிராமி. இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு திரைக்கதையாக, “பாபா பிளாக் ஷீப்” உருவாகி வருகிறது.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் “பாபா பிளாக் ஷீப்” படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் புதுமுகங்களை, முன்னணி திரைப்பிரபலங்கள், மேடையில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், ஓபேலி கிருஷ்ணா, நடிகர்கள் இளவரசு, மணிகண்டன், பஞ்சு சுப்பு, தர்ஷன், ரியோ, நடிகை வாணி போஜன், ஈரோடு மகேஷ், சாய்ராம் நிறுவனத்தின் சாய்பிரகாஷ், சுட்டி அரவிந்த் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களையும் தனித்தனியே ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

Leave a Reply