இன்று மாலை 6 மணிக்கு ”மாமன்னன்” டிரைலர் !!

இன்று மாலை 6 மணிக்கு ”மாமன்னன்” டிரைலர் !!

‘கண்ணை நம்பாதே’ படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் ‘மாமன்னன்’. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.

இந்நிலையில் மாமன்னன் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது. வடிவேலு மற்றும் உதயநிதியின் முகங்கள் தையல் போட்டிருக்கும் படி வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply