அல்சர் உங்களுக்கு இருந்தால் இந்த ஒரு ஜூஸ் போதும்!

அல்சர் உங்களுக்கு இருந்தால் இந்த ஒரு ஜூஸ் போதும்!

சிலருக்கு சாப்பிடுவது என்பதே மிகவும் அலர்ஜியான விஷயம். எவ்வளவு தான் தாய்மார்கள் நல்ல உணவுகளை சமைத்து கொடுத்தாலும் சாப்பிடும் விஷயத்தில் மிகவும் சோம்பேறியாக தான் இருப்பர்.

இப்படி தொடர்ந்து செய்து வரும் போது சிலருக்கு அதிகமாக வயிறு வலி ஏற்படும். அது தான் அல்சருக்கு முக்கிய அறிகுறி. சரியாக சாப்பிடாமல், இருக்கும் போது வயிற்றில் உணவைச் செரிக்க சுரக்கப்படும் அமிலமானது வயிற்றை அரிப்பதால் புண்கள் ஏற்படும்.

அதனையே அல்சர் என்கிறோம். இதனால் வயிறு மற்றும் சிறு குடல் சுவர்களில் புண்கள் ஏற்படும். இந்த அல்சரை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட்டால், எவ்வித பிரச்சனையும் இல்லை.

ஆனால் அதையே கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அதனால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இதனை எளிய முறையில் இயற்கையாக குணப்படுத்த உதவும் மருந்தினை குறித்து பார்கலாம்.

அல்சருக்கு பயன்படும் மிக சிறந்த மருந்து அருகம்புல் சாறுதான். இது அல்சருக்கு மட்டுமல்லாமல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பயன்படுத்தலாம். அருகம்புல்லின் இலைப் பகுதியை விட, அதனுடைய தண்டு பகுதி அதிக மருத்துவ குணம் கொண்டது.

அருகம்புல்லின் இலை பகுதியின் ஓரங்களில் காணப்படும் வெண்மையான பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால் சிலருக்கு வயிற்று போக்கை ஏற்படுத்திக் கூடிய வாய்ப்பு உள்ளது.

உடலில் அலர்ஜி பண்புகள் அதிகம் உள்ளவர்கள் அருகம்புல்லைத் தவிர்ப்பது நல்லது. மேலும் வெளியில் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் பொடிகளை வாங்காமல், வீட்டிலேயே ஒரு தொட்டியில் அருகம்புல்லை வளர்த்து அதனை ஜூஸ் செய்ய பயன்படுத்தலாம்.

அப்படி இல்லையென்றால் வயலோரங்களில் அதிகமாக இது கிடைக்கும். இந்த அருகம்புல்லை எடுத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் அரைத்து சாறு பிழிந்து வெந்நீருடன் கலந்து பயன்படுத்தினால் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுதலை பெறலாம்.

Leave a Reply