இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் தேன் கலந்த இளநீர்!!

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் தேன் கலந்த இளநீர்!!

இளநீர் மற்றும் தேன் கலந்த கலவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு கொடுக்கிறது. இளநீர் இயற்கையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள ஒரு இயற்கை மருத்துவ பானம்.

தேன் மற்றும் இளநீரில் காணப்படக்கூடிய ஆன்டி-ஆக்சிடன்ட்கள் விரைவில் முதுமை தோற்றம் ஏற்படாமல் தடுக்கக் கூடிய சக்தி கொண்டது. இந்த பானம் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்து நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

சருமம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்கிறது தேன் கலந்த இளநீர் பானம். இளநீர் மற்றும் தேனில் செல்கள் சிதைவடைவதை தடுக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. இதனால் நம்முடைய உடலில் உள்ள செல்கள் மிக வேகமாக சிதைவடைவது தடுக்கப்படுகிறது.

இளநீரில் வைட்டமின் பி2, வைட்டமின் பி3 மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் அதிகம் காணப்படுகிறது. இது தோல் சுருக்கத்தை குறைக்கும் சக்தி கொண்டது. மேலும் சருமத்தில் ஈரப்பதத்தை சரியான விகிதத்தில் வைத்திருக்க உதவுகிறது. சருமம் நெகிழ்ச்சி தன்மையோடு இருக்க உதவுகிறது.

தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அண்டிசெப்டிக் பண்புகள், ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் காணப்படுகிறது. இது சருமத்தில் கிருமித் தொற்றைத் தடுத்து பாக்டீரியா தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

இளநீர் தேன் கலந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இந்த தண்ணீரை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது இது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு நோய்களை தடுக்கிறது.

தேனில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இளநீரில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.

உங்களுடைய உடலில் நுழையக்கூடிய நோய்களை உண்டாக்கும் கிருமிகளை மிகவும் திறம்பட எதிர்த்து போராட உதவுகிறது. இந்த இரண்டும் உங்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.

உடலின் ஆற்றலை அதிகரிக்கக் கூடிய சக்தி கொண்டது தேன் கலந்த இளநீர் தண்ணீர்.

இது உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. உடலில் இருக்கக்கூடிய சோர்வை எதிர்த்து போராட உதவுகிறது. இந்த கலவையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

மேலும் தேனில் விரைவான ஆற்றலைக் கொடுக்கக்கூடிய தனித்துவமான கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த பொருட்கள் எல்லாம் சேர்ந்து உங்களுடைய உடலை ஆற்றலாக வைத்திருக்க உதவுகிறது.

அதிகம் சோம்பலால் அவதிப்படுபவர்கள் இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அவர்களுடைய உடலில் இருக்கக்கூடிய சோர்வுகள் எல்லாம் நீங்கி தெம்போடு தங்களுடைய வேலையை செய்யத் தொடங்குவார்கள்.

தேன் கலந்த இளநீர் தண்ணீர் செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமானத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து செரிமானத்தை மிக வேகமாக நடைபெற செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது இந்த பானம்.

மேலும் செரிமான மண்டலத்தில் ஏற்படக்கூடிய வீக்கங்கள், வலிகள், இரைப்பை அழற்சி, அமிலத் தன்மை போன்ற பல வயிற்று பிரச்சனைகளை குறைக்கிறது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது தேன் கலந்த இளநீர் பானம். இளநீர் மற்றும் தேன் ரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

Leave a Reply