33 லட்சம்  ரூபாய் வாடகை தொகையை செலுத்தாத புகாரில்  சவுமியா அன்புமணியின் ஐஸ் ஃபேக்டரிக்கு சீல்….

33 லட்சம்  ரூபாய் வாடகை தொகையை செலுத்தாத புகாரில்  சவுமியா அன்புமணியின் ஐஸ் ஃபேக்டரிக்கு சீல்….

சென்னை;

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்  அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி,  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளவர்.

இந்நிலையில் வாடகை பாக்கி நிலுவை புகாரில் சென்னை காசிமேட்டில் உள்ள சவுமியா அன்புமணியின் ஐஸ் ஃபேக்டரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் ஐஸ் ஃபேக்டரிக்கு 2008 ஆம் ஆண்டு முதல் வாடகை பாக்கி  என புகார் எழுந்துள்ளது.

ரூ.38 லட்சம் வாடகை பாக்கி இருந்த நிலையில் கடந்த ஏப்ரலில் ரூபாய் 5 லட்சம் மட்டும் வாடகை செலுத்தியுள்ளனர். மீதி உள்ள 33 லட்சம்  ரூபாய் வாடகை தொகையை செலுத்தாத நிலையில் ஐஸ் ஃபேக்டரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுமித்ரா ஏஜென்சி என்ற பெயரில் இயங்கி வரும் ஐஸ் ஃபேக்டரிக்கு துறைமுக அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Leave a Reply