முதல்வர் ஸ்டாலினை மீம்ஸ் போட்டு முகநூலில் கலாய்த்த போலீஸ்… அதிரடி சஸ்பெண்ட்…

முதல்வர் ஸ்டாலினை மீம்ஸ் போட்டு முகநூலில் கலாய்த்த போலீஸ்… அதிரடி சஸ்பெண்ட்…

திருநெல்வேலி ;

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் நெல்லை பெருமாள்.

இவர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை நேரில் சென்று பார்த்த தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தையும், அதோடு காமெடி நடிகர் போண்டாமணியின் புகைப்படத்தையும் இணைத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் நடிகர் பிரபு நாதஸ்வரம் வாசிப்பது போன்ற காட்சியையும் முகநூலில் இணைத்து கலாய்த்துள்ளார்.

இதுகுறித்து திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் முதல் நிலைக் காவலர் நெல்லை பெருமாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்தார்.
 

Leave a Reply