செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுப்பு…. 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை;
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நிராகரித்தது சென்னை நீதிமன்றம்.
மருத்துவமனையில் இருதய சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகொள்ள நீதிபதி அனுமதி அளித்துள்ள நிலையில் விசாரணைக்கு மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லக் கூடாது எனவும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு அளித்தது .
மேலும் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை கோரியிருந்த நிலையில் 8 நாட்கள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.