மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசை லாரி ஏற்றி கொன்ற மணல் கடத்தல் கும்பல்… கொடூர நிகழ்வு..

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசை லாரி ஏற்றி கொன்ற மணல் கடத்தல் கும்பல்… கொடூர நிகழ்வு..

பெங்களூர்:

கர்நாடகாவின் கல்பர்க்கி மாவட்டத்தில் நாராயணபுர என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமப பகுதியில் பல இடங்களிலில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் பலர் ஈடுபடுவதாக குற்றாச்சாட்டு உள்ளது.

இதனால், அவ்வப்போது அங்கு வரும் வாகனங்களை போலீசார் செக் போஸ்ட்டில் மறித்து சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில், நேற்று மாலை சவுகான் என்ற போலீஸ் ஒருவர், மணல் கடத்தி வந்த  லாரியை நிறுத்த சொன்னார்.

ஆனால், லாரியை நிறுத்தாமல் வந்த ஓட்டுநர் சித்ஹன்னா என்பவர், அந்த போலீசை ஏற்றிக் கொலை செய்து விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

லாரி ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே சவுகான் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, லாரியை ஏற்றி போலீசை கொலை செய்த டிரக் ஓட்டுநரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மணல் கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

காங்கிரஸ் ஆட்சி அங்கு மீண்டும் அமைந்துள்ள ஒரே மாதத்தில் மணல் மாஃபியா கும்பல்களின் இந்த அடாவடி செயல்கள் பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply