பெரியார் முகம் பொறித்த செங்கோலை கொடுத்த சமூக நீதி அமைப்பினர்…. வாங்க மறுத்த முதல்வர்…

பெங்களூர் ;
பெரியார் முகம் பொறித்த தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை முதல்வர் சித்தராமையாவுக்கு பரிசாக வழங்க தமிழகத்தை சேர்ந்த சமூகநீதி பேரவை என்ற அமைப்பை சேர்ந்த சுமார் 100 பேர் அமைப்பின் தலைவர் மனோகர் தலைமையில் பெங்களூருவில் உள்ள முதல்வர் அரசு இல்லத்தில் முதல்வரை சந்தித்தனர்.
அப்போது அந்த செங்கோலை முதல்வர் சித்தராமையா வாங்க மறுத்துவிட்டார்.
ஜனநாயக மரபுக்கு எதிரான அரசர் மரபை போற்றும் வகையில் செங்கோல் இருப்பதால் அதை நாடாளுமன்றத்தில் பாஜக கட்சி சார்பில் முதல் பிரதமர் வைத்த போது காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.
ஆகையால் இந்த செங்கோலை தான் வாங்கிக் கொள்ள முடியாது என சமூகநீதி பேரவை சேர்ந்த உறுப்பினர்களிடம் முதல்வர் தெரிவித்தார்.

ஏற்கனவே சால்வை, மாலை போன்றவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டேன். புத்தகங்களை மட்டுமே பரிசாக ஏற்றுக் கொள்வேன் என முதல்வர் அறிவித்திருந்த காரணத்தினால் சமூகநீதி பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதல்வருக்கு பூக்களையும், புத்தகங்களையும் பரிசாக வழங்கிய நிலையில் அதை முதல்வர் சித்தராமையா பெற்றுக்கொண்டார்.