இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயானபோட்டி: பேட்டிங்கில் எங்களுடைய அதிரடி நிச்சயம் தொடரும் – ரோகித் சர்மா நம்பிக்கை!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயானபோட்டி: பேட்டிங்கில் எங்களுடைய அதிரடி நிச்சயம் தொடரும் – ரோகித் சர்மா நம்பிக்கை!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் தொடரை (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்:-

முதலில் நாங்கள் போதுமான அளவு ரன்களை குவிக்கவில்லை என்பதே உண்மை. இந்த மைதானத்தில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. மைதானத்தின் மீது எந்த ஒரு குறையும் கிடையாது. நாங்கள் பேட்டிங் செய்யும் விதத்தில்தான் எங்களது திட்டங்களை செயல்படுத்த தவறி விட்டோம். ஆனால் இதுபோன்று சிலமுறை நடக்கத்தான் செய்யும். ஒரு பேட்டிங் குரூப்பாக நாங்கள் சரியாக செயல்படவில்லை.

எல்லா நாட்களும் நமக்கு சாதகமான நாட்களாகவே அமைந்திடாது. அதேபோன்று எல்லா நாளும் வெற்றியாகவும் இருக்காது. இதுபோன்ற தோல்விகளிலிருந்தும் சில பாடங்களை நாம் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக வெளிப்படுத்தினர் என்று நினைக்கிறேன்.

நாங்கள் பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றத்தை காண வேண்டும். இருப்பினும் ஒரு விசயத்தை மட்டும் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். பேட்டிங்கில் எங்களுடைய அதிரடி நிச்சயம் தொடரும். எங்களுடைய அப்ரோச்சில் எந்தவித மாற்றமும் இருக்காது. இந்த ஒரு தோல்விக்காக நாங்கள் பயப்பட போவதும் கிடையாது. இனியும் தொடர்ந்து பேட்டிங்கில் அதிரடியாகவே விளையாட முயற்சிப்போம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

dinaparavai

Related articles

Leave a Reply