காமன்வெல்த் விளையாட்டு போட்டி: ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வி சங்கர் வெண்கலம் வென்றார்….

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வி சங்கர் வெண்கலம் வென்றார்….

சென்னை:

சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 186 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

நேற்று 6-வது சுற்று ஆட்டம் நடந்தது. ஓபன் பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய ‘பி’ அணிக்கு நேற்று சறுக்கல் ஏற்பட்டது. 1.5-2.5 என்ற கணக்கில் பலம் வாய்ந்த அர்மெனியாவிடம் தோற்றது. இந்த தொடரில் முதல் தோல்வியை தழுவியது.

இந்த சுற்றில் சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் மட்டுமே வெற்றி பெற்றார். அவர் தொடர்ந்து 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளார். பி.அதிபன், சத்வானி தோல்வியை தழுவினார்கள். சரீன் நிஹால் ‘டிரா’ செய்தார்.

இந்திய ‘ஏ’ அணி உஸ்பெகிஸ்தானுடன் 2-2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. இந்திய ‘சி’ அணி 3.5.-1.5 என்ற கணக்கில் லிதுவேனியாவை வீழ்த்தியது.

6 சுற்றுகள் முடிவில் அர்மெனியா 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருந்து வந்த இந்திய ‘பி’ அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு பின் தங்கியது.

உஸ்பெகிஸ்தான், பிரான்ஸ், இந்தியா ‘ஏ’, நெதர்லாந்து, கியூபா, இந்தியா ‘சி’, ஜெர்மனி, கஜகஸ்தான், செர்பியா, பெரு அணிகளும் 10 புள்ளிகளை பெற்று உள்ளது. ‘டை’ பிரேக்கர் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 4 முதல் 13-வது இடங்களில் உள்ளன. அதாவது இந்தியா ‘ஏ’ அணி 6-வது இடத்திலும், இந்தியா ‘சி’ அணி 9-வது இடத்திலும் உள்ளன.

அமெரிக்கா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

பெண்கள் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி 3-1 என்ற கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தியது. சென்னையை சேர்ந்த வைஷாலி, கோனேரு ஹம்பி ஆகியோர் வெற்றி பெற்றனர். ஹரிகா, தானியா சச்தேவ் மோதிய ஆட்டம் ‘டிரா’ ஆனது.

இந்திய ‘பி’ அணி 2-2 என்ற கணக்கில் செக்குடிய ரசுடன் ‘டிரா’ செய்தது. இந்திய ‘சி’ அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

பெண்கள் பிரிவில் 6 ரவுண்டுகள் முடிவில் இந்திய ‘ஏ’ அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. அசர்பெய் ஜான், ருமேனியா தலா 11 புள்ளிகளுடன் முறையே 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

போலந்து, உக்ரைன், அர்மெனியா, பல்கேரியா, இஸ்ரேல், ஜார்ஜியா, வியட்னாம், நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 4 முதல் 11-வது இடங்களில் உள்ளன.

இந்திய ‘பி’ அணி 15-வது இடத்திலும், இந்திய ‘சி’ அணி 19-வது இடத்திலும் இருக்கின்றன.

இன்று ஓய்வு நாளாகும். இன்னும் 5 சுற்றுகள் எஞ்சியுள்ளன. 7-வது சுற்று நாளை நடக்கிறது.

dinaparavai

Related articles

Leave a Reply