ஸ்டாலின் சொல்லட்டும் செந்தில் பாலாஜி ஒரு உத்தமர்னு … அதுக்கப்புறம் அவர பத்தி பேசமாட்டேன்…. அண்ணாமலை சீரியஸ் பேச்சு …

ஸ்டாலின் சொல்லட்டும் செந்தில் பாலாஜி ஒரு உத்தமர்னு … அதுக்கப்புறம் அவர பத்தி பேசமாட்டேன்…. அண்ணாமலை சீரியஸ் பேச்சு …

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி உயர்வை பற்றி பதிலளித்தார், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பி களும் வெளியேறிவிட்டனர்.

நிதி அமைச்சரின் பதிலை ஏற்றுக் கொள்ளமுடியாமல் வெளிநடப்பு செய்துள்ளனர். பொருளாதார ரீதியாக உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளன, ஆனால் இந்தியா வேகமாக வளரக் கூடிய நாடாக உள்ளது. 

இன்றைய கணக்கின்படி வளர்ச்சி 7.4 சதவீதம் இருக்கிறது. ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி எம்பிக்கள் உண்மைக்கு புறம்பாக பொய்யை காட்டவிழ்த்துவிட்டு வருகிறார்கள் என்றார். அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, மின் கட்டணம் குறித்து புகார் கூறும் பாஜக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக செந்தில்பாலாஜி கூறுகிறார்,

அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் முதலில் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதிமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது தற்போதைய முதல்வர் ஸ்டாலின்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

அப்போது செந்தில்பாலாஜியை ஊழலுக்கு பேர் போன அமைச்சர் என குறிப்பிட்டு பேசினார். இப்போது ஸ்டாலின் அது தவறானது என்றோ, செந்தில்பாலாஜி உத்தமர் என்றோ பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறினால் இனி அரசியலில் நான் இருக்கும் வரை மின்சாரத் துறை பற்றி எதுவும் பேச மாட்டேன் எனக் கூறினார். 

dinaparavai

Related articles

Leave a Reply