பால்குடிச்சு பழக்கப்பட்டதால எப்ப பார்த்தாலும் பால் நினைப்பாவே இருக்கார்…. ஜெயக்குமாரை நக்கலடித்த தமிழக அமைச்சர்…

பால்குடிச்சு பழக்கப்பட்டதால எப்ப பார்த்தாலும் பால் நினைப்பாவே இருக்கார்…. ஜெயக்குமாரை நக்கலடித்த  தமிழக அமைச்சர்…

பால்வளதுறை அமைச்சர் நாசர் பால் குடிக்கும் பூனை என அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர், பால்குடித்து பால்குடித்து பழக்கப்பட்ட அவர் எப்பொழுதும் பால் நினைப்பாகவே இருந்துக் கொண்டு  மற்றவர்களையும் அவரைப் போலவே நினைத்துகொண்டு பேசுகிறார்  என இரட்டை அர்த்தத்தில் பதிலளித்தார்.

சென்னை ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு  போக்குவரத்து கழகத்தின் சார்பில் இரண்டு சொகுசு பேருந்துகள் சேவையை  பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் நாசர், ஜெயக்குமார் பால்குடித்து பால்குடித்து பழக்கப்பட்ட அவர் எப்பொதும் பால் நினைப்பாகவே இருக்கிறார். அதனால்  மற்றவர்களையும் அவரைப் போன்று நினைத்துகொண்டிருப்பதாக இரட்டை அர்த்தத்தில் பேசினார்.

தவறான கருத்துக்களை கூறி தன்னை முன்நிலைபடுத்திகொள்ள வேண்டும் என்று ஒரு சில அரசியல் தலைவர்கள் வதந்திகளை பரப்பி வருவதாக கூறினார். 

dinaparavai

Related articles

Leave a Reply