பாகிஸ்தான் கடற்படையினரின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு.!

பாகிஸ்தான் கடற்படையினரின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு.!

பலுசிஸ்தான்,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் கடற்படையினரின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், இரண்டு அதிகாரிகள் மற்றும் ஒரு மாலுமி என 3 பேர் உயிரிழந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் துறைமுக நகரமான குவாதரில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இடைக்காலப் பிரதமர் அன்வாருல் ஹக் காக்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply