சர்க்கரை நோயை உருவாக்கும் மைதா மாவு பரோட்டோ!!

சர்க்கரை நோயை உருவாக்கும் மைதா மாவு பரோட்டோ!!

வளர்ந்து விட்ட நாகரிக உலகில் நோய்களும் அதிகரித்தபடியே உள்ளது. புதிது புதிதாக பரவுகின்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அதை பரிசோதிக்க முதலில் எலிக்கு செலுத்துவதே வாடிக்கையாக உள்ளது.

ஏனெனில் தயாரிக்கப்படும் மருந்து மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு.

அதனால் என்ன என்கிறீர்களா? உலகில் தற்போது பரவலாக காணப்படும் சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும், அது வராமல் தடுக்கவும் அனைவரும் முயற்சி செய்வார்கள்.

அதற்காக சில யோசனைகளையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும். ஆனால் பெரும்பாலும் இந்த சர்க்கரை நோய் உருவாகுவதற்கு காரணம் மைதாவில் தயாராகும் உணவுகள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சர்க்கரை நோய் தடுப்புக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் எலிக்கு கொடுத்து பரிசோதிப்பதற்காக எலிக்கு முதலில் சர்க்கரை நோயை உருவாக்குகின்றனர்.

இதற்காக அவர்கள் அலாக்சாம் என்ற மருந்தை ஊசி மூலம் அதன் உடலில் செலுத்துவதாகவும், இந்த ஊசியை செலுத்திய மறுநாள் எலிகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள்.

இந்த அலாக்சாம் ஊசி தயாரிக்க பயன்படும் கெமிக்கல் மைதாவில் நிறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து ஓட்டல்களிலும் பரோட்டா உணவு வழங்கி வருகின்றனர்.

மக்களும் இதை ஆர்வத்துடன் சாப்பிட்டு செல்கின்றனர். இந்த பரோட்டாவுக்கு பயன்படும் மைதாவை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் அதில் எலிக்கு செலுத்தப்படும் அலாக்சாம் கெமிக்கல் நிறைந்திருப்பதாக மதுரை கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தானோ என்னவோ கேரளாவில் உள்ள உணவகங்களில் பரோட்டா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகு வதற்கு இதுபோன்ற உணவு பொருட்களே 70 சதவீதம் காரணமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தி சுகர், கேன்சர், கிட்னி பெயிலியர் போன்ற நோய்களுக்கு ஆளாகாமல் இருக்க பரோட்டா போன்ற மைதா உணவுகளை தவிர்க்கலாமே! பரோட்டா பிரியர்கள் உஷார்!

Leave a Reply