நடிகர் கோபி காந்தியின் “உச்சம் தொடு”… பட துவக்க விழா..

சேலம்:
தோல்வியையே சுமந்து வந்த கோபி காந்தி உச்சம் தொடு என வெற்றி கூட்டணியை சுமக்கவுள்ளார்.
கோபி காந்தி முதல் மாணவன், வைரமகன், வீரக்கலை, திரைப்படங்களை தயாரித்து நடித்து வெளியீடு செய்துள்ளார். தொடர்ந்து RSG பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து நடிக்கும் நான்காவது திரைப்படத்திற்கு தற்போது உச்சம் தொடு என பெயரிடப்பட்டுள்ளது.
சர்வதேச விளையாட்டு வீரரின் வாழ்வியலில் கோபி காந்தி நடிக்கவுள்ளதாகவும், கோபி காந்தியுடன் பிரபல நடிகர், நடிகையர்களும் நடிக்க உள்ளதாகவும், உச்சம் தொடு திரைபடம் பாடல் பதிவு முடிந்துள்ளதாகவும், பாடல்கள் குறித்து தயாரிப்பாளர், நடிகர் கோபி காந்தி கூறியதாவது. உச்சம் தொடு படத்திற்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கிய (இசை சோலை) சௌந்தர்யன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பாடலாசிரியர் சங்க தலைவர் கவிஞர் தமிழமுதன் எழுதிய உச்சம் தொடு பாடலுக்கு பின்னணி பாடகர் கானா பாலா குரலிலும், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு
பாடல் எழுதிய கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடலுக்கு பின்னணி பாடகர் ரீட்டா குரலிலும்,
கவிஞர் பாலபாரதி எழுதிய நெகு நெகுன்னு இக்குறையே பாடல் பின்னணி பாடகர்கள் ராஜலட்சுமி, செந்தில் கணேஷ் குரல்களிலும், மற்றும் காதலொரு கை குழந்தை பாடல் பின்னணி பாடகர்கள் ஆண்ட்ரோஸ், ஜெனீபா குரல்களிலும் மொத்தம் நான்கு பாடல்கள் (இசை சோலை) சௌந்தர்யன் இசையமைத்துள்ளார்.
கவிஞர்கள் முத்துலிங்கம், தமிழமுதன், பாலபாரதி ஆகியோர்கள் கதைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் சிறப்பாக வரிகளை எழுதியுள்ளார்கள். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவருக்கும் பிடிக்கும் விதமாக நான்கு சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கி மீண்டும் ஒரு வலம் வருவதற்கு (இசை சோலை) சௌந்தர்யன் தயாராகி உள்ளார். நெகு நெகுன்னு இக்குறையே பாடல் அனைத்து தரப்பினரையும் கவரும் மீண்டும், மீண்டும் கேட்க தூண்டும் அனைவரின் செல்போனிலும், பேருந்துகளிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் உச்சம் தொடு திரைப்பட பாடல் ஒலிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது எனவும், பாலபாரதி இயக்குகிறார் எனவும், ஒளிப்பதிவாளராக மகிபாலன், நடனம் பாஸ்கர், சண்டைபயிற்சி நாக்கவுட் நந்தா ஆகியோர்கள் பணிபுரிவதாகவும், விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி முடித்து, வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் கோபி காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.