‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் வித்தியாசமான லுக்கில் மோகன்லால் !!

‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் வித்தியாசமான லுக்கில் மோகன்லால் !!

மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிஜோ ஜோஸ் ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,’நண்பகல் நேரத்து மயக்கம்’ போன்ற பல படங்களை இயக்கி கவனம் பெற்றார்.

இவர் தற்போது ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மோகன் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. வித்தியாசமான லுக்கில் மோகன்லால் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply