எழுதிய கடிதத்தை திரும்ப பெறுங்க..!! ஓபிஎஸ் தரப்பை கேட்டுக்கொண்ட நீதிபதி…

எழுதிய கடிதத்தை திரும்ப பெறுங்க..!! ஓபிஎஸ் தரப்பை கேட்டுக்கொண்ட நீதிபதி…

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரம் தொடர்பாக நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கோரியது.

நீதிபதி மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்று விளக்கம் அளித்த பன்னீர்செல்வம் தரப்பு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே வாதிட விரும்புவதாக விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை திரும்ப பெற, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வலியுறுத்தினார்.

அந்த கடிதத்தை திரும்ப பெறுவது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அவருடைய வக்கீல் தெரிவித்தார்.

dinaparavai

Related articles

Leave a Reply