யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!!

யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!!

பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎஃப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது.

பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, அக்டோபர் 3ம் தேதி வரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.

Leave a Reply