இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை!!

புதுடெல்லி:
நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடர், எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக்கோப்பை என எந்தவொரு தொடரிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இது குறித்து சஞ்சு சாம்சன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் தொடர்ந்து முன்னோக்கி நகர்வேன்”என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 390 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.71 என்பது குறிப்பிடத்தக்கது. 24 டி20 போட்டிகளில் விளையாடி 374 ரன்களும் எடுத்துள்ளார்.

Leave a Reply