எத்தனை முறை என்னை ஜெயிலில் அடைத்தாலும் மக்களுக்காக போராடி கொண்டே இருப்பேன் …ராகுல் காந்தி ஆவேசம் …

எத்தனை முறை என்னை ஜெயிலில் அடைத்தாலும் மக்களுக்காக  போராடி கொண்டே இருப்பேன் …ராகுல் காந்தி ஆவேசம் …

புதுடெல்லி:

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து காங்கிரசார் மனு கொடுக்க குவிந்தனர்.

பிரதமர் மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்துக்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவானது. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள். பேரணி நடத்தினர்.

பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பேரணி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டுத் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேலாக நாடாளுமன்றம் – ஜனாதிபதி மாளிகைக்கு இடையே உள்ள விஜய்ஸ்சவுக் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தடுத்து வைக்கப்பட்டார்.மக்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் கைதாகுவதற்குத் தயார் என ராகுல் காந்தி கூறினார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் டெல்லி கிங்ஸ் வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

dinaparavai

Related articles

Leave a Reply