நொச்சி இலையும் தீரும் நோய்களும், முன்னோர் கண்ட வைத்தியம்!

நொச்சி இலையும் தீரும் நோய்களும், முன்னோர் கண்ட வைத்தியம்!

நொச்சி இலையை நம் முன்னோர்கள் பாரம்பரியமாக மருத்துவத்திற்காக பயன்படுத்தி வந்துள்லனர். நொச்சி தாவரத்தில் இலைகள் மிகவும் முக்கியமானவை. இதில் கருநொச்சி, நீலநொச்சி வெண்ணொச்சி என சில வகைகள் உள்ளன.

நொச்சி இலையை கசக்கி அதன் சாறை சுத்தமான வெள்ளைத் துணியில் போட்டு அதை மூக்கில் முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு நீங்கும். நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க நல்ல பலன் கிடைக்கும்.

கொதித்த நீரைத் துணியில் நனைத்து ஒற்றமிடலாம். நொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளிக்க பிரசவித்தவர்களின் அசதி குறையும்.

நொச்சி இலையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க வேண்டும். நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து கட்டிகளின் மீது பூசி வர கட்டி கரையும், வீக்கம் குறையும்.

நொச்சி இலையில் ஆவி பிடித்து வருவதன் மூலம் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். மேலும் ஆஸ்துமா பிரச்சனை குணமாக மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை நொச்சி இலையுடன் சேர்த்து விழுது போல் அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு உண்டு வரவேண்டும்.

நொச்சிச் செடி இருக்கும் இடங்களில் நோய்களைப் பரப்பும் கொசுக்களும் பூச்சிகளும் வராது. நொச்சி துவர்ப்பு மற்றும் காரச் சுவை கொண்டது. உடல்வலி, உடலில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நொச்சி இலையை வாணலியில் போட்டு வதக்கி ஒரு வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி, வெதுவெதுப்பான சூட்டில் எங்கெல்லாம் வலி வீக்கம் இருக்கிறதோ அங்கு ஒத்தடம் கொடுத்து எடுக்க வேண்டும்.

dinaparavai

Leave a Reply