செம்பருத்தி இலையின் மருத்துவ பயன்கள்…..

செம்பருத்தி இலையின் மருத்துவ பயன்கள்…..

செம்பருத்தி இலையின் சாறு கூந்தலைக் கறுப்பாக்க உதவுவதுடன் முடியைப் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற செய்யும். செம்பருத்தி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தலைமுடியில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கூந்தல் வளச்சிக்கான தைல தயாரிப்பில் செம்பருத்தி இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறன. இலைகளை அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம்.

செம்பருத்தி இலையை அரைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து சாப்பிட வெள்ளை வெட்டை நோய் குணமாகும். கண்நோய்கள், சூடு கட்டி, கண் எரிச்சல் போன்ற கண் நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

சிறுநீர் எரிச்சலை குணமாகும். சிறுநீர் எரிச்சலைக் குணமாக்க 4 செம்பருத்தி இலைகளை 2 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். செம்பருத்தி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது இரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது. சளி மற்றும் இருமலை குணமாக்கும். செம்பருத்தி இலையில் வைட்டமின் சி உள்ளதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செம்பருத்தி இலை ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.

சிறுநீரகப் பிரச்சனைகளை போக்கும். இதற்கு செம்பருத்தி இலை கலந்த தேநீரைப் பருகலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுகின்றது.

dinaparavai

Leave a Reply