அவமானப்படுத்த பாக்கிறியா? வட்டாட்சியரை வறுத்தெடுத்த தமிழக அமைச்சர் ..அதிகாரிகள் அதிர்ச்சி …

அவமானப்படுத்த பாக்கிறியா? வட்டாட்சியரை வறுத்தெடுத்த தமிழக அமைச்சர் ..அதிகாரிகள் அதிர்ச்சி …

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மீட்டிங்கிற்கு மைக் செட் பண்ணி வைக்காத வட்டாட்சியரை அமைச்சர் சி.வி.கணேசன் வறுத்தெடுத்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடனான சந்திப்பு கூட்டம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது. மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விருத்தாச்சலம் வட்டாரத்திற்குட்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேச மைக் இல்லாததை கண்டு டென்ஷனான அமைச்சர் கணேசன், கூட்டத்துக்கு ஏற்பாடுகளை கவனித்துக்கொண்ட வட்டாட்சியரை அழைத்து மைக் எங்கய்யா.. நான் எப்படி பேசுறது.. வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்த திட்டமிட்டியா என அனைவர் முன்னிலையிலும் வறுத்தெடுத்து விட்டார். அமைச்சர் கணேசன் இந்தளவுக்கு டென்ஷன் ஆவார் என எதிர்பார்க்காத அந்த வட்டாட்சியர் ஒரு நிமிடம் ஆடிப்போனார்.

எவ்வளவு முக்கியமான கூட்டம் இது, மைக் செட் பண்ணி வைக்க மாட்டியா என மீண்டும் தனது கோபத்தை அந்த வட்டாட்சியரிடம் வெளிப்படுத்தினார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் அங்கு மைக் செட் செய்யப்பட்டு ஸ்பீக்கர் பாக்ஸ் வைக்கப்பட்டது. ஆனால் அமைச்சர் கணேசனுக்கு கோபம் தீர்ந்தபாடில்லை. இதைப் பார்த்த உயர் அதிகாரிகள் அமைச்சரை சமாதானம் செய்து ஒரு வழியாக வட்டாட்சியரை காப்பாற்றினர்

dinaparavai

Related articles

Leave a Reply