கோவை வந்த நிர்மலா சீதாராமனை சந்தித்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி…

கோவை;
தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி கடந்த 4 வருடங்களாக நீடித்து வந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.
இந்நிலையில் நேற்று இரவு கோவை வந்த நிர்மலா சீதாராமனை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். இதனையடுத்து இன்று கோவையில் நடைபெற்ற தூய்மைப்பணி நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டவர், தொடர்ந்து கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ கே செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தனது x தளத்தில் நிர்மலா சீதாராமன் பதிவிட்டு தன்னை அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்றதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய அரசு சார்பாக நடைபெற்ற நிகழ்வில் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டது. அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கையில் மத்திய அரசு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையிலேயே கலந்து கொண்டதாக தெரிவித்தனர்.