தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

ஜெயிலர் படத்தின் ரெக்கார்ட் பிரேக்கிங் வசூலுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த படம் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த மாதம் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் இன்னமும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தின் குழுவினரை ஒவ்வொருவராக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே துஷாரா விஜயன் இந்த படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ரித்திகா சிங்கும் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply