நடிகை குஷ்பூ திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு பூஜை!!

நடிகை குஷ்பூ திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு பூஜை!!

தமிழ் சினிமாவில் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கனவு கன்னியாக இருப்பவர் நடிகை குஷ்பூ . சினிமா நடிகைக்கு கோவில் கட்டி கொண்டாட வேண்டும் என்ற அளவிற்கு ரசிகர்களை தனது அழகினாலும், நடிப்பு திறமையினாலும் ஈர்த்தவர் என்ற பெருமையைப் பெற்ற நடிகை குஷ்பூ. சமீபத்தில் இவர் தனது 53வது பிறந்த நாளை கொண்டாடினார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக பயணத்தை தொடங்கி தர்மத்தின் தலைவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து வருஷம் 16 ,வெற்றி விழா, கிழக்கு வாசல் ,நடிகன் ,தாலாட்டு பாடவா, மை டியர் மார்த்தாண்டன், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக மாறினார். குறிப்பாக பிரபு ஜோடியாக குஷ்பூ நடித்த சின்னத்தம்பி படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது பொறுப்பான குடும்பத் தலைவியாகவும் அதே சமயத்தில் அரசியலிலும் தன்னை முன்னிறுத்தி வெகு சிறப்பாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூவை திருச்சூரில் விஷ்ணுமாயா கோவிலின் சிறப்பு பூஜைக்காக அழைத்துள்ளது கோவில் நிர்வாகம்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருச்சூரில் உள்ள #விஷ்ணுமாயா கோவிலில் #நாரிபூஜை செய்ய அழைக்கப்பட்டதை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். தெய்வமே அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புபவர்களுக்கும் இது இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply