தயவு செய்து டாஸ்மாக் கடையை மூடுங்கள்… திமுக எம்.எல்.ஏ காலில் விழுந்து கதறிய பெண்… பரபரப்பு…

மதுரை ;
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மன்னாடிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சோழவந்தான் தொகுதி திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் இந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்த போது, திடீரென வந்த பெண் ஒருவர் எம்.எல்.ஏ காலில் விழுந்து தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத எம்.எல்.ஏ. வெங்கடேசன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் கிராம மக்கள் பலரும் அதே கோரிக்கையை வலியுறுத்தினர்.
எனவே கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இப்பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனால் கிராம சபை கூட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.