உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை !!

உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை !!

இன்று நடைபெறவுள்ள உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

13-வது 50 ஓவர் (ஒருநாள்) உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 05ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இந்தியாவின் முதல் ஆட்டம், அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலக கோப்பைக்கு தயாராக பயிற்சி ஆட்டங்கள் முக்கியம் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும்.

பயிற்சி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் தங்களது அணியில் உள்ள 15 வீரர்களையும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply