ஆசிய விளையாட்டு போட்டி – அரை யிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!!

ஆசிய விளையாட்டு போட்டி – அரை யிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!!

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் டி20 கிரிக்கெட் தொடரில் நேபால் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியில் காலிறுதிப் போட்யில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் யாஷ்வி ஜெய்ஷ்வால் சதம் விளாசி அசத்தினார். இதேபோல் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபால் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கால் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நேபாள அணி வெளியே சென்றது.

Leave a Reply