ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா !!

ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா !!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அனாகத் சிங், அபய் சிங் ஜோடி 2-1 என்ற கணக்கில் மலேசியா அணியிடம் தோற்றது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

இதுவரை இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Leave a Reply