விஷால் படத்தில் இணைந்த இயக்கு னர்கள் ஹரி,கவுதம் மேனன் , சமுத் திரகனி!!

விஷால் படத்தில் இணைந்த இயக்கு னர்கள் ஹரி,கவுதம் மேனன் , சமுத் திரகனி!!

சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். விஷால் 34 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசி யாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது.

இந்நிலையி, ‘விஷால் 34’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ள்ளது.

அதன்படி, இந்த படத்தில் இயக்குனர்கள் கவுதம் மேனன் மற்றும் சமுத்திரகனி இணைந்துள்ளனர். இதனை நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply