இன்று உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது!!

இன்று உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது!!

“தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாராதியார் உணவின் முக்கியத்துவத்தை பற்றி கூறியுள்ளார். மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. இந்த உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாகும்.

உணவின் பாதுகாப்பையும், பசி, பட்டினியை போக்கவும் 1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1981-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதியை உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது.

உணவு உற்பத்திக்கு முக்கியமான விவசாயிகள், உணவு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலாளர்கள் என இதில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

Leave a Reply