ஜாமீன், ஜாமீன் என கேட்டு, ஒரு நெத்திலி மீன் கூட கிடைக்காத நிலை தான் இருக்கிறது …செந்தில் பாலாஜி குறித்து ஜெயக்குமார் கிண்டல்…

ஜாமீன், ஜாமீன் என கேட்டு, ஒரு நெத்திலி மீன் கூட கிடைக்காத நிலை தான் இருக்கிறது …செந்தில் பாலாஜி குறித்து ஜெயக்குமார் கிண்டல்…

சென்னை;

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தமிழகத்தில் டெங்கு தலைவிரித்து ஆடுகிறது. அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஆனால் மக்களின் நம்பிக்கை தகர்க்கும் வகையில் தான் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு ஓட்டப்பந்தய வீரராக தான் இருக்கிறார். மருத்துவத்துறையில் தவறுகள் அதிக அளவில் நடக்கின்றன. தவறுகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழகத்தை சுகாதாரமான மாநிலமாக வைத்திருக்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது” என்று கூறினார்.

செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு,

”கஜினி முகமது கூட தோற்றுவிடுவார் போல. கஜினி முகமது போல படையெடுத்து ஜாமீன், ஜாமீன் என கேட்டு, ஒரு நெத்திலி மீன் கூட கிடைக்காத நிலை தான் இருக்கிறது. நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அது நீதி வடிவில் இருக்கிறது” என்று கிண்டல் செய்தார் ஜெயக்குமார்

Leave a Reply