நயன்தாராவின் 75-வது படத்திற்கு அன்னபூரணி என்று தலைப்பு!!

நயன்தாராவின் 75-வது படத்திற்கு அன்னபூரணி என்று தலைப்பு!!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

நயன்தாரா 75 எனும் தற்காலிக பெயரில் உருவான இந்த படத்தின் தலைப்பு மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

அதன்படி நயன்தாராவின் 75-வது படத்திற்கு அன்னபூரணி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.

சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply