உடலுக்கு வலுவூட்டும் ஜூஸ் வகைகள்!!

உடலுக்கு வலுவூட்டும் ஜூஸ் வகைகள்!!

நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவுகளில் நமக்கு தேவையான நியூட்ரிஷியன் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே அதிக புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த ஹெல்த் டிரிங்க் களை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு தேவையான அனைத்து புரோட்டீன், கால்சியம், மினரல்ஸ் மற்றும் வைட்டமின்களை தருவதால், உடல் ஆரோக்கியத்தை 100 சதவீதம் உறுதி செய்யலாம்.

மாதுளை ஜூஸ்

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்ய வேண்டுமா? இந்த டிரிங்கை குடிச்சு பாருங்க ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் மாதுளை விதைகள், பீட்ருட் 2 துண்டு, காரட் ஒன்று, ஒரு தக்காளி ஆகியவற்றை சேர்த்து அரைத்து வடிகட்டி ஜூஸ் எடுத்து அதனை தினமும் காலையில் குடித்து வந்தால் புத்துணர்ச்சியாக இருக்கும். டயட் ஃபாளோ செய்கிறவர்கள் இந்த ஜூசை குடித்து பயன்பெறலாம்.

மாதுளம் பழத்தில் வைட்டமின் சி, கே, இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பழத்திற்கு தனி சிறப்பும், பல்வேறு நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

பப்பாளி ஜூஸ்

பப்பாளி பழத்தை துண்டுகளாக வெட்டி அதில் சிறிதளவு சர்க்கரை மற்றும் ஐஸ் கியூப்களை சேர்த்து மிக்சி ஜாரில் அரைத்து வடிகட்டி எடுத்தால் பப்பாளி ஜூஸ் தயார். இதனையும் உங்கள் தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இதனை தினமும் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமமும் மினுமினுப்பாக காணப்படும்.

எடை இழப்பு முதல் கண் பார்வையை மேம்படுத்துவது வரை பெண்களுக்கு பப்பாளி ஜூஸ் ஏராளமான நன்மைகளை தருகிறது. பப்பாளியில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பெண்களுக்கு மாதவிடாய் வலிய்ல் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க உதவுகிறது.

எனர்ஜி டிரிங்க்

சியா விதைகளை ஒரு ஸ்பூன் எடுத்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 20 நிமிடத்திற்கு மூடி வைக்க வேண்டும். அதன்பிறகு வெள்ளரிக்காய், புதினா இலைகள் 5, இஞ்சி சிறிய துண்டு, எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், அதனுடன் ஐஸ்கியூப்களை சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டி எடுத்தால் எனர்ஜி டிரிங் தயார். நாம் மிகவும் சோர்ந்து காணப்படும் போது இந்த டிரிங்கை எடுத்துக்கொள்ளலாம். மேலும் இந்த டிரிங் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் பயன்படுகிறது.

கேரட் ஜூஸ்

ஒரு மிக்சி ஜாரில் ஒரு கேரட், ஒரு ஆரஞ்சுபழ சுளைகளை போட்டு அதில் சிறிதளவு சர்க்கரை, ஐஸ் கியூப்களை சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்தால் கேரட் ஜூஸ் ரெடி. இந்த ஜூசை வாரத்திற்கு ஒரு முறை குடித்து வர கண்பார்வை திறன் அதிகரிக்கும். மேலும் சருமம் பளபளக்கும், வைட்டமி சி நிறைந்திருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

கேரட்டில் இயற்கையாகவே ஏராளமான ஆண்டி ஆக்சிடண்ட்கள், தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே இது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நெலிக்காய் ஜூஸ்

இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து கொட்டைகளை நீக்கிவிட்டு மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி, கால்டீஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஜூஸ் தயார் செய்ய வேண்டும்.

வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சளி இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.

Leave a Reply