சுதா கொங்கராவின் புதிய படத்தில் சூர்யா!!

சுதா கொங்கராவின் புதிய படத்தில் சூர்யா!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும்.

இந்நிலையில், இப்படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், படத்தின் தலைப்பில் பாதியை மறைந்து ‘புறநானூறு’ என தெரியும்படி வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும், ரத்தம் தெறிக்க.. தீப்பொறி பறக்க.. சூர்யா தோன்றும் இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Leave a Reply