27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம்!!

27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம்!!

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார்.

அதன்படி, 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம். மேலும், அந்த சித்தர்கள் எங்கு குடிகொண்டு உள்ளனர் என்பதை இங்கு விரிவாக காண்போம்.

அஸ்வினி – காலங்கி நாதர் சித்தர் இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய கோவில்களில் உள்ளது.

பரணி –போகர் சித்தர் இவருக்கு பழனி முருகன் கோவிலில் தனி சமாதி உள்ளது.

கார்த்திகை – ரோமரிஷி சித்தர் இவருக்கு ஜீவசமாதி இல்லை. (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என கூறப்படுகிறது).

ரோகிணி – மச்சமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

மிருகசீரிடம் – பாம்பாட்டி சித்தர் மற்றும் சட்டமுனி சித்தர். பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் ஜீவசமாதி ஸ்ரீரங்கத்தில் உள்ளது.

திருவாதிரை – இடைக்காடர் இவரது ஜீவசமாதி திருவண்ணாமலையில் உள்ளது.

புனர்பூசம் – தன்வந்தரி சித்தர் இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவசமாதி ஆனவர்.

பூசம் – கமலமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருவாரூரில் உள்ளது.

ஆயில்யம்- அகத்தியர் சித்தர் இவரது ஒளிவட்டம் குற்றாலம் பொதிகை மலையில் உள்ளது.

மகம் – சிவ வாக்கிய சித்தர் இவரது ஜீவசமாதி கும்பகோணத்தில் உள்ளது.

பூரம் – ராமதேவ சித்தர் இவரது ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை.

உத்திரம் – காகபுஜண்டர் இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

ஹஸ்தம் – கருவூரார் சித்தர் இவரது சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

சித்திரை – புண்ணாக்கீசர் சித்தர் நண்ணாசேர் என்ற இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.

சுவாதி – புலிப்பாணி சித்தர் இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

விசாகம் – நந்தீசர் சித்தர் மற்றும் குதம்பை சித்தர் நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

அனுஷம் – வால்மீகி சித்தர் இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

கேட்டை – பகவான் வியாசருக்கு உரிய நட்சத்திரம் இவரை நினைத்தாலே போதும். அந்த இடம் வருவார்.

மூலம் – பதஞ்சலி சித்தர் இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

பூராடம் – ராமேதவர் சித்தர் இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

உத்திராடம் – சித்தபிரான் கொங்கணர் இவர் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் திருப்பதி ஆகும்.

திருவோணம் – தட்சிணாமூர்த்தி சித்தர் இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

அவிட்டம் – திருமூலர் சித்தர் இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

சதயம் – கவுபாலர் சித்தர் இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

பூரட்டாதி – ஜோதிமுனி சித்தர் இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

உத்திரட்டாதி – டமரகர் சித்தர் இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

ரேவதி – சுந்தரானந்தர் சித்தர் இவரது ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

எனவே, 27 நட்சத்திரக்காரர்களும் அவரவர்களுக்குரிய ஜீவசமாதி இடங்களுக்கு சென்று வணங்கினால் சித்தர்களின் அருளை முழுமையாக பெற்றலாம்.

Leave a Reply