ரூ.20 கோடி தராவிட்டால் சுட்டுக்கொல்வோம்… முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்…

ரூ.20 கோடி தராவிட்டால் சுட்டுக்கொல்வோம்… முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்…

மும்பை ;

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 20 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10 என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் உட்பட 55 பாதுகாப்பு பணியாளர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் முகேஷ் அம்பானிக்கு வந்த மெயில் ஒன்றில், 20 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடப்பட்டிருந்ததாக தெரிகிறது. அதில், “20 கோடி ரூபாயை தராவிட்டால் உங்களைக் கொன்று விடுவோம், எங்களிடம் இந்தியாவிலேயே சிறந்த துப்பாக்கி சுடுபவர்கள் இருக்கிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply