தங்களை தரக்குறைவாக பேசி ஆடியோ வெளியிட்ட  திமுக கவுன்சிலர் மீது போலீசில் புகார் அளித்த திமுக பெண் கவுன்சிலர்கள்…

தங்களை தரக்குறைவாக பேசி ஆடியோ வெளியிட்ட  திமுக கவுன்சிலர் மீது போலீசில் புகார் அளித்த திமுக பெண் கவுன்சிலர்கள்…

திருச்செந்தூர் ;

திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு, நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரமேஷ், ஆணையர் கண்மணி இன்ஜினியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் துவங்கியதுமே 3வது திமுக கவுன்சிலர் ரூபன், பெண் கவுன்சிலர் ஒருவரை தரக்குறைவாக விமர்சித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளதாகவும், அவரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுகவைச் சேர்ந்த 14வது வார்டு கவுன்சிலர் ரேவதி, 12வது வார்டு கவுன்சிலர் சாரதா, 20வது வார்டு கவுன்சிலர் முத்துஜெயந்தி, 27ஆவது வார்டு கவுன்சிலர் லீலா ஆகியோர் திடீரென வெளிநடப்பு செய்தனர்.

இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்களிடையே காரசார வாக்குவாதம் நடந்தது.

இந்நிலையில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் ரேவதி தலைமையில் கவுன்சிலர்கள் முத்து ஜெயந்தி, லீலா ஆகியோர் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தனர்.

அதில் பெண் கவுன்சிலர்களை தரக்குறைவாக விமர்சித்து வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்ட 3 வது வார்டு கவுன்சிலர் ரூபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply