வயிற்று உப்புசம் பிரச்சனைக்கு கொஞ்சம் சோம்பை மென்று தின்று தண்ணீர் குடித்தால் போதும் தெரியுமா ?

வயிற்று உப்புசம் பிரச்சனைக்கு கொஞ்சம் சோம்பை மென்று தின்று தண்ணீர் குடித்தால் போதும் தெரியுமா ?

பொதுவாக வயிறு உப்பிசம் இருந்தால் நம்மால் சாப்பிட முடியாது .மேலும் வயிறும் வலித்து நம்மை பாடாய் படுத்தி விடும் .இந்த வயிறு சம்பந்தமான பிரச்சினைக்கு பல்வேறு இயற்கை சிகிச்சை முறைகள் உள்ளது .அது பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.

1.ஒரு எலுமிச்சை பழச்சாற்றை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து விடுங்கள்.

  1. எலுமிச்சை பழச்சாற்றில் இருக்கும் அசிட்டிக் ,வாயுக்களை வெளியேற்ற செய்யும் இதனால் வயிற்றில் வலியும் குறையும்.

3.பொதுவாகவே வாழைப்பழம் மலச்சிக்கலை தீர்க்கும் .. வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எளிதாக கலைகிறது.

4.வாழைப்பழத்தில் வயிற்று உப்புசத்தை விரைவாக சரி செய்யக்கூடிய ஆற்றல் நிறைந்துள்ளது.

5.வயிறு உப்புசமான நேரத்தில் ஒன்றிரண்டு வாழைப் பழங்களை சாப்பிடுங்கள்.

6.பிறகு பசி எடுக்கும் வரை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

7.குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினைகள் தீர ஓமத்திரவம் கொடுக்கலாம் . கொஞ்ச நேரத்தில் வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுவை அகற்றி வயிற்று உப்புசத்தை குறைத்துவிடும்.

8.வயிறு உப்புசம் ஏற்பட்டு அசௌகரியமான சமயத்தில் மெல்லோட்டம், நடைப்பயிற்சி, ஆசனங்கள், நீச்சல் ஆகியவற்றை மேற்கொண்டால் கொஞ்ச நேரத்தில் வயிற்று உப்புசம் சரியாகிவிடும்.

9.பிரியாணி சாப்பிட்டுவிட்டு அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்க இனிப்பு சோம்பை சாப்பிடுவது வழக்கம்.

10.நாம் எப்போதெல்லாம் அதிகமாக சாப்பிட்டது போல உணர்கிறோமோ, அந்த வயிற்று உப்புசம் பிரச்சனைக்கு கொஞ்சம் சோம்பை மென்று தின்று தண்ணீர் குடித்தால் போதும்.

Leave a Reply