கமல்ஹாசனுடன் இணையும் எச்.வினோத்திற்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ்!!

கமல்ஹாசனுடன் இணையும் எச்.வினோத்திற்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ்!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து கமலின் 233-வது படத்தை ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், எச். வினோத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “கே.எச்.233 படத்திற்காக என் ‘ஆண்டவர்’ கமல்ஹாசனுடன் இணையும் எச்.வினோத் அண்ணாவிற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply