10 ஆண்டுகளாக இதுவரை 64 நாடுகளுக்கு சென்று தேனிலவு கொண்டாடிய அமெரிக்க தம்பதி!!

10 ஆண்டுகளாக இதுவரை 64 நாடுகளுக்கு சென்று  தேனிலவு கொண்டாடிய அமெரிக்க தம்பதி!!

அதன்பிறகு குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என வாழ்க்கை வழக்கம் போலாகி விடும். ஆனால் இந்த நடைமுறையை மாற்றி திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன பின்னரும் தொடர்ந்து தேனிலவு கொண்டாடுகிறோம் என்று யாராவது கூறினால் நம்புவீர்களா?

அதுவும் நாடு, நாடாக சென்று தேனிலவை ரசித்து, ருசித்து கொண்டாடி வருகிறோம் என்றால் கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கும். அப்படி ஒரு தம்பதி தற்போது கேரளாவில் முகாமிட்டு கொட்டும் மழையிலும் தேனிலவை கொண்டாடி வருகிறார்கள்.

அவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, அவர்கள் அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியை சேர்ந்த மைக் ஹாவர்ட் – ஆன் என தெரிவித்தனர். ஆனை நியூ ஜெர்சியில் நடந்த கைப்பந்து போட்டியின்போது மைக் ஹாவர்ட் சந்தித்து உள்ளார். இருவரும் காதல் வசப்பட கடந்த 2012-ல் திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்குமே நாடு, நாடாக சென்று சுற்றி பார்ப்பதில் விருப்பம் அதிகம். தேனிலவு கொண்டாட்டத்துக்கென தொடங்கிய இந்த சுற்றுப்பயணம் அதன்பின்பும் தொடர்ந்தது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என கடந்த 10 ஆண்டுகளாக இதுவரை 64 நாடுகளுக்கு சென்று இந்த ஜோடி தேனிலவு கொண்டாடி விட்டனர். இப்போது 65-வது நாடாக இந்தியா வந்துள்ளனர். இங்கு கேரளாவின் சுற்றுலா தலங்கள் பற்றி கேள்விப்பட்டு வந்ததாக தெரிவித்தனர்.

தேனிலவு இன்பமாக உள்ளது. இதற்காக நாங்கள் எதையும் திட்டமிடுவதில்லை. செல்லும் நாடுகளுக்கு ஏற்ப அங்குள்ள சூழ்நிலைகளை கொண்டு பயணத்தை திட்டமிடுகிறோம் எனவும் கூறினர்.

dinaparavai

Leave a Reply