உணவில் முட்டை சேர்த்துக் கொண்டால் இதய நோயால் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் குறைவு!!

தினமும் முட்டை உட்கொள்பவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகுறைவு என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வை சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். 30 முதல் 79 வயதுக்குட்பட்ட 5 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
ஆய்வின் முடிவில் தினமும் உணவில் முட்டை சேர்த்துக்கொண்டால் இதய நோயால் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதுபோல் பக்கவாதத்தால் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் குறையும் என்பதும் தெரியவந்துள்ளது.
முட்டையில் கொழுப்பு அதிகம் இருப்பதால் அதனை அதிக அளவு உட்கொள்வது உடல் நலனுக்கு கேடானது.
அதேவேளையில் முட்டையில் வைட்டமின்களும், புரதங்களும் உள்ளடங்கி இருக்கிறது. அதனால் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிடுவது நல்லது.
பெரும்பாலான ஆய்வு முடிவுகளும் முட்டையை அளவோடு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்பதையே தெளிவுபடுத்தியுள்ளன.
இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள தினமும் ஒரு முட்டை சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.