காமன்வெல்த் போட்டி: வேகநடை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்- பிரியங்கா சாதனை!!

காமன்வெல்த் போட்டி: வேகநடை போட்டியில் இந்தியாவுக்கு  மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்- பிரியங்கா சாதனை!!

பிரிட்டன்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவர் பந்தய தூரத்தை 43 நிமிடம் 38.83 வினாடிகளில் கடந்தார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.

இப்போட்டியில் ஆஸ்ரேலியாவின் ஜெமிமா (42:34.30) தங்கப்பதக்கமும், கென்ய வீராங்கனை எமிலி (43:50.86) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இப்போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவனா (47:14.13) 8வது இடத்தைப் பிடித்தார்.

காமன்வெல்த் வேகநடை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஹர்மிந்தர் சிங் ஆவார். இவர் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில், 20 கிமீ வேகநடை போட்டியில் வெண்கலம் வென்றார்.

dinaparavai

Related articles

Leave a Reply