கோலி மீதான விமர்சனத்துக்கு இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி!!

கோலி மீதான விமர்சனத்துக்கு இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி!!

இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி இதுவரை 543 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளது. அவரது ஸ்கோரில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

நேற்று முன்தினம் கொல்கத்தாவில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோலி தனது 49-வது ஒருநாள் போட்டி சதத்தை அடித்தார். இதன் மூலம் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார்.

இதற்கிடையே விராட் கோலி சுயநலமாக விளையாடினார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “கோலியின் பேட்டிங்கில் சுயநல உணர்வைப் பார்த்தேன்.

இந்த உலகக் கோப்பையில் இது மூன்றாவது முறையாக நடந்தது. 49-வது ஓவரில், அவர் சதத்தை எட்டுவதற்கு ஒரு ரன் எடுக்க விரும்பினார், அவர் அணிக்கு முதலிடம் கொடுக்கவில்லை.

கோலி நன்றாக விளையாடவில்லை என்று நான் கூறவில்லை, அவர் 97 ரன்களை எட்டும் வரை அவர் அழகாக பேட்டிங் செய்தார். அவர் எடுத்த கடைசி மூன்று சிங்கிள்களின் நோக்கத்தைப் பற்றி பேசுகிறேன். அவர் பவுண்டரி அடிக்காமல் ஒரு ரன்னாக எடுத்தார். எப்போதும் தனிப்பட்ட மைல்கல்லுக்கு மேல் அணிக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றார்.

இந்த நிலையில் கோலி மீதான விமர்சனத்துக்கு இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

விராட் கோலி சுயநலத்துடன் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக பேசப்படும் விவாதங்களை கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆம் விராட் கோலி சுயநலவாதியே. ஒரு பில்லியன் மக்களின் கனவை பின்பற்றும் சுயநலம் அவரிடம் உள்ளது.

இவ்வளவு சாதித்த பின்பும் புதிய சாதனைகளை உருவாக்க வேண்டும் என்ற சுயநலம் இருக்கிறது. தனது அணி வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் சுயநலமாக இருக்கிறார். ஆம் விராட் கோலி சுயநலவாதியே” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply