ஜெயிலில் ஆடைகளை அவிழ்த்து வீடியோ எடுத்து சித்ரவதை செய்கின்றனர் ….நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் பகீர் கடிதம் ..

ஜெயிலில் ஆடைகளை அவிழ்த்து வீடியோ எடுத்து சித்ரவதை செய்கின்றனர் ….நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் பகீர் கடிதம்  ..

பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடார் , தன்னை அடித்து துன்புறுத்துவதாக மனைவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஹரி நாடார் என்று சொன்னவுடனே நமக்கு நினைவுக்கு வருவது நகை கடை போல் கிலோ கணக்கில் தங்க நகைகள்  அணிந்து அவர் வலம் வருவது தான்.  தற்போது ஹரி நாடார் மோசடி வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் தனக்கு ஹரி நாடார் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி 7 .2 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் ஹரி நாடார் தனது மனைவிக்கு சிறையில் இருந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில் பெங்களூர் சிறையில் தன்னை நிர்வாணப்படுத்தி கேலி செய்வதாக கூறியுள்ளார். விசாரணை என்ற பெயரில் தன்னை சித்திரவதை செய்வதாக தனது மனைவிக்கு 64 பக்க கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

கொடுங்குற்றவாளி போல தன்னை நடத்தி, சிறையில் ஆடைகளை களைய சொல்லி, கேலி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு ஜாமீன் வழங்காமல் மிரட்டுவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

dinaparavai

Related articles

Leave a Reply